Join and Earn Money

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

நெல்லிக்காய் ....நெல்லிக்காய் ...நெல்லிக்காய் ...




 இரும்பு சத்து குறைவாக உள்ளவர்கள் தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் இரும்பு சத்து அதிகரிக்கும் . மேலும் சர்க்கரை  நோய் உள்ளவர்கள் நெல்லிக்காய் சாறு எடுத்து தினமும் காலை வேளையில் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்

நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நிழல்  காய்ச்சலில் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணையில் ஊற வைத்து தலைக்கு தடவி வந்தோமானால் முடி நன்றாக வளர்வதோடு கருமையாகவும்  பளளப்பாகவும் இருக்கும்.  

சனி, 26 பிப்ரவரி, 2011

மிளகு சீரகத்தின் மருத்துவ குணங்கள்


நம்மில் பலருக்கும் இருமல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் . அது போன்ற சமயங்களில் சூடான பாலில் மஞ்சள் பொடி மற்றும் மிளகு பொடி கலந்து குடித்து வந்தோமானால் இருமல் படிப்படியாக குறைந்து விடும் .


கோடை காலங்களில் நம் உடலில் உஷ்ணம்  அதிகமாக இருக்கும் அதை குறைப்பதற்கு தினமும் கொதி தண்ணீரில் சீரகம் கலந்து குடித்தால் உஷ்ணம் பெருமளவு குறையும் .





வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

முகத்தை பொலிவோடு வைக்க


பெண்களே தினம் உங்கள் முகத்தில் மஞ்சள் பூசி  குளித்து வாருங்கள் . இது உங்கள் முகத்தை பொலிவோடு வைப்பது மட்டுமில்லாமல் முகத்தில் வளரும் சிறிய முடிகளையும் அகற்றி  விடும் . முகத்தில் உள்ள பருக்கள் அனைத்தையும் அகற்றி விடும் .

 மேலும் மஞ்சள் மிகபெரிய கிருமி நாசினி . எனவே உங்கள் சமையலிலும் தொடர்ந்து மஞ்சள் பயன்படுத்தி வாருங்கள்