Join and Earn Money

ஞாயிறு, 20 மார்ச், 2011

டைல்ஸ் பதித்த தரையில் எண்ணெய் கொட்டிவிட்டால்

டைல்ஸ் பதித்த தரையில் எண்ணெய் கொட்டிவிட்டால் சிறிது கோதுமை மாவை எண்ணெய் கொட்டிய இடத்தில் தூவி துடைத்த பிறகு சோப்பு போட்டு துடைத்தால் வழுக்காது. 


ஞாயிறு, 13 மார்ச், 2011

வெற்றிலை -பெண்கள் விருப்பம்


வயிற்று வலிக்கு உடனடி தீர்வு வேண்டுமா  வெற்றிலையில் உப்பை வைத்து சேர்த்து வாயில் போட்டு  மென்று சாறுடன் முழுங்கினால் வயிற்று வலி விரைவில் குணமாகும் .

கால்சியம் குறைபாட்டுக்கு வெற்றிலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும் .

 வெற்றிலை சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும் .

மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திப்போம் 




வெள்ளி, 4 மார்ச், 2011

முருங்கை கீரை


ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு கைப்பிடி அளவு முருங்கை கீரை யை போட்டு பத்து நிமிடங்கள் வேக விடவும். அதில் தேவையான அளவு உப்பு , மிளகு போட்டு குடித்து வந்தால் தொண்டை தொடர்புடைய சுவாசக் குழல் தொடர்புடைய நோய்கள் குணமடையும்.